Thursday, September 10, 2009

மாய மனுசி

தூரங்களைக் கடந்து
அவள் வந்தாள்.
அது
நீண்ட ...நெடும் பயணமாய்
இருந்தது .
என் காலங்களுக்குள்
அவளை இட்டு நிரப்பி
தாழிட்டேன் .

பின் ஒரு பொழுது
அவளைப் பார்க்கும் தாகத்தோடு
என் கால அறை திறந்தேன் .
ஒரு துளி மழை இருந்தது .

துளி மழையால்
ஒரு கடல் செய்தேன் .
கடலுக்குள் மறைந்தது
நிலம் .

என் பாற்கடல் கடைந்து
அமுதம் தேடினேன் .
நீல விஷமாய் என்னுள்
நிறைந்தாள்.

அறையெங்கும் பேரிசையாய்
பெருகியது
அவளது அலைஓசை .
அலைகளின் சுழலில்
பெருங்காற்று சுழன்றேழ
பற்றியெரிந்தது
என் வனம் .
வனமெங்கும் நெருப்பாய் அவள் .

மழையாய் பெய்தாலும்
கடலாய் பெருகினாலும்
கற்றாய் சுழன்றாலும்
கை விரல் கோர்க்க
அனுமதித்ததில்லை
அந்த மாய மனுசி .

No comments:

Post a Comment