பூமிப் பந்தை
உதைத்துப் புறப்படுகிறது
அவள் கால்கள்.
சின்னஞ்சிறிய கூந்தலில்
வானவில்லை சூடிக் கொண்டிருக்கிறாள் .
தெத்தி விளையாடும் அவள் பாதங்களில்தான்
மழைத் துளிகள் உருவாகின்றன .
எப்போதேனும் வியர்வை பூத்தால்
நிலவை எடுத்து முகம் துடைத்துக் கொள்கிறாள் .
கோபம் கொள்கையில்
சூரியன் அவள் விழிகளாகிறது.
மொத்தத்தில்
வெளிகளின் மனுசி அவள்.
என் தளிர்களின் பனித்துளியில்
எப்போதும் காணக்கிடைப்பவள்.
Thursday, September 10, 2009
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment