Friday, September 11, 2009
ஆதிச் சொல்
எதுவும் பேசிவிடாதே
சொற்களை நான் வெறுக்கிறேன்.
இன்னமும் உபயோகிக்கப்படாமல்
துருப்பிடித்துக் கிடக்கின்றன
என்னுள் சில சொற்கள்.
பிரார்த்தனையின் யாசகச்சொல்
மன்னிப்பின் கண்ணீர் சொல்
பிரிவின் வலிமிக்கச் சொல்
இனி
எதையும்பயன்படுத்தமாட்டேன்.
நீ
செவிகளில் சேனம் கட்டியக் குதிரை
வழியெங்கும் இறைந்து கிடக்கின்றன
வார்த்தைகளின் லட்சம் பிரேதங்கள்
நீயும் எதுவும் பேசிவிடாதே...
நான் பேசியபோது செவிடாகவும்
பாவனை செய்தபோது
குருடாகவும் இருந்துவிட்டாய்
பதில் சொல்லவெண்டிய கணத்தில்
நீ ஊமையாகிப் போனதால்
உயிர்மரித்தது சொற்கள் மட்டுமல்ல
நம் உறவுகளும்தான்.
ஆயினும் ஒப்புக் கொள்கிறேன்
நம் ஆதிச் சொல்லில் அன்பிருந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in