
தவிர்க்க இயலாது
ஒருபோதும் மழையை
குடை பிடித்தாலும்
பாதம் தொடும்.

அவ்வப்போது
பூமியை நிராகரிக்கும் மழை
ஒருபோதும்
மழையை நிராகரித்ததில்லை
பூமி.

துளி பெய்து பெருகும்
துளியோடும் போகும்
மழையை யார் கேட்பது.

நீ அசைத்த கிளை பெய்த மழைபோல்
இல்லை ஒரு மழையும்.

மழை பெய்யும்போதெல்லாம்
உன் ஞாபகம் வருகிறது
இப்பொதெல்லாம்
அடிக்கடி மழை பெய்கிறது.
பூமி கொடுத்தது யாருக்கும் தெரியாது
மழை
வானத்தின் கொடைதான்.
நீ அசைத்த கிளை பெய்த மழைபோல்
இல்லை ஒரு மழையும்.

மழை பெய்யும்போதெல்லாம்
உன் ஞாபகம் வருகிறது
இப்பொதெல்லாம்
அடிக்கடி மழை பெய்கிறது.
பூமி கொடுத்தது யாருக்கும் தெரியாது
மழை
வானத்தின் கொடைதான்.

இலைகளற்ற
இந்தக் கோடையில்
நீ வந்து சென்றதை
எந்தப் பூப்பூத்துக் கொண்டாடுவது நான்.

arumaiyana kavithai...mazhaiyae oru kavithai enbathai arivikum padi ullathu
ReplyDelete